பக்கம்:உணர்வின் எல்லை.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வையையின் வனம்

195

வில்லை. புண்ணிய நறுமலர்களாகிய ஆடையால் தன்னைப் போர்த்துக்கொண்டு, பொங்கி வந்த கண்ணீரையும் மறைத்துக்கொண்டாள். அப்போது அவளைப் பார்த்தவர், ‘இது புனலாறு அன்று; பூவாறு’ என்றே சொல்வர்! அவ்வளவும் பூக்களால் தன்னைப் போர்த்து மறைத்துக் கொண்டாள். இந்த உண்மையைக் கவிஞன் கண்டு காப்பியத்தில் பாடுகின்றான்.

‘தையற் குறுவது தானறித் தனன் போல்
புண்ணிய நறுமல ராடை போர்த்து
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
புனல்யா றன்றிது பூம்புனல் யாறேன, (சிலம்பு 13: 171–174)

ஆம்.. வையைத் தாய் நீர்வளம் மட்டுமன்று; நெஞ்சு வளமும் படைத்தவள்!

அவள் வாழ்க! வளம் கொழித்து வாழ்க!