பக்கம்:உணர்வின் எல்லை.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

உணர்வின் எல்லை

இச்செய்திகள் அறிந்து பெருந்துன்பம் அடைந்த, கண்ணகியின் பார்ப்பனத்தோழி தேவந்தியும், கண்ணகியின் செவிலித்தாயாகிய காவற்பெண்டும், கண்ணகியின் அடித்தோழியும், மாதரி மகள் ஐயையைக் கண்டு, அவளுடன் வையை ஆற்றின் கரைவழியே சென்று, திருச்செங்குன்று மலை உச்சியில் ஏறிக் கண்ணகி கோயிலை அடைந்தனர். அங்கே பத்தினிக் கடவுட்கு விழாச்செய்த பெருமிதத்தோடு வீற்றிருந்த சேரவேந்தன் செங்குட்டுவனைக் கண்டு, தங்கள் வரலாற்றை, உள்ளம் உருக்கும் வகையில் எடுத்து உரைத்தனர். உரைசால்பத்தினி மனித உரு நீத்து மன்னுபுகழ்த்தெய்வ உருப்பெற்ற சிறப்பை ஏத்திப் போற்றினர்.

அந்நிலையில் செங்குட்டுவன் விழிகள் அகன்று நோக்க, தெய்வ வடிவில் ககன வெளியில் காட்சி தந்தாள் கண்ணகி. அவள் திருவடிகளைப் பொற்சிலம்புகள் அணி செய்தன; இடையினை மேகலை அணி செய்தது ; திருக்கரங்களில் வளையல்கள் ஒளி வீசின; திருச்செவிகளில் நல்வயிரப் பொற்றோடு கதிர் விட்டது. இன்னும், சாம்பூந்தப் பொன்னால் ஆகிய ஆபரணங்கள் பல அழகு செய்ய, மின்னற் கொடி போல் வானத்தில் விளங்கிய கண்ணகியின் திருவுருவைக் கண்டு, 'என்ன! இஃதென்ன! இஃதென்ன கொல்! என்று வியந்து நின்ற சேர வேந்தன் செவி குளிர

‘தென்னவன் தீதிலன் தேலர்கோன் நன்கோயில்

நல்விருந் தாயினுன் நாளவன் தன்மகள்