பக்கம்:உணர்வின் எல்லை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளங்கோ கூறும் 'என் கதை'

201


அத்துடன் மனித உருவிற் வாழ்ந்தபோது எந்தத் தேவந்தி கண்ணகிக்குத் தோழியாக விளங்கினாலோ அவளைப் பார்த்து, 'சந்தன முதலியன சாத்துதல், மலரால் அருச்சித்தல், நறும்புகை எடுத்தல ஆகிய நற்பணிகளைக் கண்ணகி கோயிலில் நாளும் செய்வாயாக!' என்று அருள் ஆணை பிறப்பித்தான்.

பின்னர்ப் பத்தினி கோட்டத்தை மூன்று முறை வலம்வந்து வணங்கி நின்றன் உலக மன்னவனாகிய செங்குட்டுவன். அவ்வமையம் அவன் முன்னிலையில் அப்போதுதான் சிறையினின்றும் விடுதலை பெற்ற ஆரிய அரசரும், முன்னரே வஞ்சியர் நகரில் சிறைப்பட்டு இருந்து அந்நேரத்தில் விடுதலை பெற்ற பிற வேந்தரும், குடக நாட்டுக் கொங்கரும், மாளுவ தேயத்து மன்னரும், கடல்சூழ்ந்த இலங்கைக் காவலன் கயவாகுவும் வந்து நின்றனர். அவர்கள் அனைவரும் கண்ணகி தெய்வத்தை நோக்கிக் கை கூப்பி வணங்கி, 'தாயே நாங்கள் எங்கள் நாட்டில் நினக்குக் கோயில் எழுப்பிய செங்குட்டுவன் பிறந்த நாளில் செய்யும் வேள்வியில் எழுந்தருள வேண்டும்' என்று பணிந்து வேண்டினர். மாநில் மன்னர் மனமுருகிச் செய்து கொண்ட வேண்டுகோட்குச் செவி சாய்த்தது கண்ணகி தெய்வம். 'தந்தேன் வரம்' என்று எழுந்தது ஒரு குரல். அது கேட்டுச் செங்குட்டுவனும் ஏனைய அரசர்களாம், அவர்தம் பெருஞ்சேனைகளும் பத்தினி தெய்வத்தின் புகழ் போற்றினர்.

முத்தி இன்பத்தையே கண்டவர் போன்று மகிழ்ந்து உண்மை நெறியினை உவந்து போற்றும்