பக்கம்:உணர்வின் எல்லை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியும்-பாரதியும்

13

‘இனி மறக்கிலேன் எனை நீர் மறக்கிலீர்’ என்று இனி மையாக, நயமாக வேண்டுகிறார்.

“தீயினை நிறுத்திடுவீர்—நல்ல
     தீரமும் தெளிவுமிங் கருள்புரிவீர்
மாயையி லறிவிழந்தே—உம்மை
     மதிப்பது பறந்தன பிழைகளெலாம்
தாயென வுமைப்பணிந்தேன்—பொறை
     சார்த்திநல் லருன்செய வேண்டுகிறேன்,
வாயினிற் சபதமிட்டேன்—இனி

     மறக்கிலேன் எனைதீர் மறக்ககிலீர்”

என்கிறார்.

வாணி வழிபாடு

‘தமிழ் வாணி’ என்று நம்மனோர் போற்றும் வாணியைத் தமிழ் மக்கள் வழிபடும் வகையைக் கண்டு ஒருவாறு வருந்துகிறார் பாரதியார். இப்போக்கு சிலருக்கு இறும்பூது விளைக்கலாம். ஆனால், ஆழ்ந்து எண்ணுங்கால் உண்மை புலனாகும். ஆண்டிற்கொருநாள் ஆங்காங்கு மூலை முடுக்குகளில் முடங்கிக் கிடக்கும் புத்தகங்களைக் குவித்து, விளக்கொன்றை ஏற்றி, பூவைப் பறித்துப் போட்டு, சந்தனத்தைத் தெளித்து, ஒரு மணி நேரத்தில் வழிபடும் முறையை நம் வரகவி விரும்பவில்லை—வெறுக்கின்றார்; ‘உரைமகளுக்கு அது ஒரு போதும் உவப்பை விளைக்காது,’ என்று வற்புறுத்திக் கூறுகின்றார். மேலும், பாரதியாருக்குக் கலைமகளைத் தன்னந் தனியே இருந்து துதித்து அவள் அருளைப் பெறுவதில் தினைத்துணையும் விருப்பமில்லை. தமிழ்க்