பக்கம்:உணர்வின் எல்லை.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளங்கோ கூறும் 'என் கதை'

203

வதா?' என்று எண்ணி வருந்தும் துன்பம் ஒழியுமாறு, கதிரவன் தோன்றும் கிழக்காகிய திசையாற் பெயர் படைத்த குணவாயிலின் கண் முனிவர்கள் எதிரே, அகன்ற இடத்தினை உடைய இந்நில வுலகைத் தாங்கும் சுமை உன்னை விட்டொழிய விலக்கி, உள்ளமும் சென்று உணர இயலாத மிக்க நெடுத்தொலைவில் உள்ள முடிவில்லாத இன்பத்தினை உடைய முத்தி உலக அரசினையாளும் மன்னன் ஆயனை!'

இக்கருத்துக்களை இளங்கோ அடிகள் படைத்த இலக்கியம் இயம்பும் திறம் வருமாறு:

யானும் சென்றேன் என்னெதிர் எழுத்து
தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி
வஞ்சி மூதுார் மணிமண் டபத்திடை
நுந்தை தாள்நிழல் இருந்தோய்! நின்னை
'அரைகவீற் றிருக்கும் திருப்பொறி உண்டென்று
உரைசெய் தவன்மேல் உருத்து நோக்கிக்
கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன் தன் செல்லல் நீங்கப்
பகல்செல் வாயிற் படியோர் தம்முன்
அகலிடப் பாரக் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேணெடுந் துாரத்து
அந்தமி லின்பத் தரசாள் வேந்தென்று
என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி'

(வரந்தரு காதை-171-185)

இளங்கோ அடிகள் வரலாற்றை அறியத் தேவந்திக்கு அந்நாள் வரை எந்த வாய்ப்பும் இல்லை.