பக்கம்:உணர்வின் எல்லை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆருயிர் மருந்து

23

அவ்வாற்றலைத் தமக்கென்று தாளிட்டுப் பூட்டி வையாது எல்லோர்க்கும் உரிமையாக்கிய ஆபுத்திரன், மணிமேகலை போன்ற பெருமக்களைப்பற்றிக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம், ‘ஆருயிர் மருத்துவர்’ என்றே சாத்தனார் குறிப்பிடுகிறார். உணவின் பெருமையை உணர்த்தும் மணிமேகலை, ‘உயிர் வாழ்விற்கு அடிப்படைத் தேவையான அதை, உலகுக்கெல்லாம் பொதுவாக்க மறுக்கும் எந்த அறமும் அறமாகாது’, என்று வற்புறுத்துகிறது, மணிமேகலா தெய்வம், தீவதிலதை, அறவண அடிகள் ஆகியோர் அருண்மொழிகளாலும், மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளாலும், கதைகளாலும், பாத்திரங்களின் வரலாறுகளாலும், சாத்தனார் இக்கருத்தைக் கற்பவர். கருத்தில் ஆழமாகப் பதியுமாறு செய்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக—

அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள் ; மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல். (காதை-25 வரி 228-31)

எனக் கூறும் மணிமேகலையின் அமுத மொழிகள் வாயிலாகவே, ‘உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் இடம் இந்த மூன்றையும் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் சமுதாயம் கட்டாயமாக வழங்கியே தீரவேண்டும்.’ என்று மன்பதைக்குத்தாம் அளிக்க விழைந்த வாழ்வின் செய்தியாக அவர் அருளியுள்ளார் அன்றே? அவர் ஏட்டிலே எழுதிச்-