பக்கம்:உணர்வின் எல்லை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

உணர்வின் எல்லை

தலைவி வாழ வேண்டும் அல்லவா? யார் சொல்வது? அவள் உள்ளத்தை அறிந்த ஒருத்தியே—உணர்வோடு அறிவும் ஒருங்கே படைத்த தலைவியின் உயிர்த்தோழியே—சொல்ல வேண்டும். எப்படிச் சொல்கின்றாள் என்று பார்ப்போம்:

குறி சொல்லும் கிழவியை முற்றத்தில் அழைத்து வந்து உட்காரச் செய்த தோழி, முறத்தில் நெல்லையும் கொண்டு வந்து அவள் முன் வைக்கின்றாள். தலைவியின் முகத்தை உற்று நோக்குகின்றாள் கிழவி. குறி சொல்லும் தன் வாழ்க்கையில் தலைவியைப் போல எத்தனையோ பேரைப் பார்த்த கண்கள் அல்லவா அவள் கண்கள் தலைவியின் மனத்தில் இருந்த உணர்வுகளே ஒவ்வொன்றாக எண்ணுவதுபோல, தோழி கொண்டு வந்த முறத்தில் இருந்த நெல்லையும் ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தாள்; தெய்வங்களைப் பாடி அழைத்துக் குறி கூறவும் தொடங்குகிறாள்.

மலையிலே பிறந்து, இயற்கையின் மடியிலே வளர்ந்து, மலைவளம் எல்லாம் கண்டவள் அல்லளா அந்த முதியவள்? ஒவ்வொரு மலையாகப் பாடுகின்றான். தலைவியின் உள்ளமெல்லாம் கொள்ளே கொண்ட தலைவனது குன்றத்தையும் பாடுகின்றாள். பாடி முடிந்தவுடன் வேறொரு குன்றத்தைப் பாட வாயெடுக்கின்றாள். ஆனால், உணர்வோடு அறிவும் நிறைந்த தோழி இடை மறிக்கின்றாள். ‘என்ன சொல்லப் போகின்றளோ!’ என்று எல்லோரும்