பக்கம்:உணர்வின் எல்லை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

உணர்வின் எல்லை

‘...............பாடுக பாட்டே ! இன்னும் பாடுக பாட்டே’ சென்ற குறுந்தொகைப் பாட்டின் அடிகளை மீண்டும் மீண்டும் பாடுகின்றது:

அகலன் மகனே! அகவன் மகளே!
மளவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகனே! பாடுக பாட்டே!
இன்னும் பாடுக பாட்டே!'

ஆயர், நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!
(குறிஞ்கி -23)

....

....

....

கவிஞன் ‘உள்ளங் கனிந்து உவந்த போதெல்லாம்’ பாட்டுப் பிறக்கும். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய அந்த முதற் கவிஞன், விண்னையும் மண்னையும் பாடினான்; கடலையும் மலையையும் பாடினான்; பச்சைப்பசுங் கிள்ளையையும், கீதமினிய குயிலையும் பாடினான். ஆனால், காலம் செல்லச் செல்ல, அவன் உள்ளமும் பண்பட்டது, பருமையையே பார்த்த அவன் கண்கள், நுண்மையையும் காணத் தொடங்கின. மலையைப் பாடிய அவன் வாய், மனத்தையும் பாடியது, வண்ணப் பறவைகளைப் பாடிய அவன் வாய், வாழ்வு உணர்வுகளைப் பாடியது.

மனத்தை—உணர்வைப்—பாடிய அந்தப் பாட்டே உயர்ந்த பாட்டு.