பக்கம்:உணர்வின் எல்லை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உணர்வின் எல்லை

33

செய்வார்! அவர் கண்களில் நீர் கலங்குகிறது; அமிழ்தனைய நெல்லிக்கனியைச் சுவைத்த அவர் நா சொல்லின்றித் தழுதழுக்கின்றது ; அவர் துடி துடிக்கிறார்; சிறியதும் பெரியதுமாகிய பாடல்களால் அவர் சிந்தை கலங்கும் கலக்கத்தையெல்லாம் புலப்படுத்துகிறார். உயிர் நண்பன் மாண்ட பின்னர் அவனோடு உடன் சாவாமல் வாழ்வதைக்காட்டிலும் வேதனையானது வேறேது? வேதனைத் தீயில் வெந்து வெந்து புண்ணாகிறது ஔவையார் உள்ளம், அவர் வாழ்க்கையையே வெறுக்கிறார். ‘காலை என்றும் மாலை என்றும் வருவதும் போவதுமாக இருக்கும் இந்த வாழ்நாட்களை எதற்காகப் பார்க்க வேண்டும்!’ என்று எண்ணி மனம் புழுங்குகின்றார்; ‘அதிகமான் இல்லாத வாழ்நாட்களில் ஒளி எதற்கு? இன்பம் எதற்கு?’ என்று எண்ணி நெஞ்சம் துடிக்கின்றார்; ‘அந்த நாட்கள் இருளடைந்து போகட்டும்,’ ஒழிந்து போகட்டும்,’ என்று சபிக்கிறார். ஆம்! தாம் வாழ்வது தமக்கே பிடிக்கவில்லை.

“இல்லா கியரோ காலை மாலை!

அல்லா கியர்யான் வாழும் நாளே!”

இதுதான் அவர் நெஞ்சக் குமுறல்.

இந்நிலையிலே தான் நாட்டில் நடக்கும் ஒரு காட்சியை அவர் காண்கிறார். ‘அழுவதா? சிரிப்பதா?’ என்பது அவருக்கு விளங்கவில்லை. மாண்ட வீரனாய் அதிகமானுக்கு வீரக்கல் நட்டனர் மாந்தர்; பீலி சூட்டிய அக் கல்லின் முன்னே தூய்மையாக்கிய

3