பக்கம்:உணர்வின் எல்லை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

உணர்வின் எல்லை

‘அப்படியா!’ என்றான் ; வியப்போடு என்னைப் பார்த்தான்.

‘ஆம்! அந்தத் தலைவிக்கு அன்பால் வளரவும் தெரியும்; அறிவால் வாழவும் தெரியும். அவள் நல்லவள் மட்டும் அல்லள்; வல்லவளுங் கூட,’ என்றேன்.

‘ அப்படியானால்........?’ என்றான் நண்பன்.

‘அந்தத் தலைவி பண்புபோலத் தமிழர் பண்பும் அமைய வேண்டும். தமிழர்கள் நல்லவர்களாய் இருத்தல் மட்டும் போதாது ; வல்லவர்களாய்—மிக வல்லவர்களாயும் இருத்தல் வேண்டும். ‘ஓ’ வெனக் கூவும் உணர்ச்சியெல்லாம் காட்டாற்று வெள்ளம் போன்றது ; நிலையற்றது ; பயனற்றது. ஓசைபடாது உறுதியோடு, உணர்வும் அறிவும் ஒன்றிக் கலந்து செய்யும் ஆக்க வேலையோ—ஆண்மைத் திறமோ காவிரியின் வெள்ளம் போன்றது; வற்றாதது வளங்கொழிப்பது,’ என்றேன்.

‘உண்மைதான்! உண்மைதான்’, என்றான் என் நண்பன், மலர்ந்த முகத்தோடு புத்துணர்வோடு.