பக்கம்:உணர்வின் எல்லை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

உணர்வின் எல்லை


சற்றே நீங்கி, வேறுவகையான கண்கொண்டு பார்த்தாலோ..........? குற்றமற்ற பெரியோர் வாழ்க்கையில் எதிர்பாராவகையில் நேர்ந்த குற்றம் குவலயம் முழுதும் உள்ள மக்களால் சுட்டிச் சுட்டிக் காட்டப் படுதல் போல, அவ்வானூர் மதியத்தின் நடுவில் குடி கொண்டிருக்கும் இருட்டு நம் கண்களே உறுத்தும் !

***

பைங்கிளிகள் பாடும் பசுஞ் சோலையினுள் நுழைகின்றாேம். அந்தி வேளை, வீங்கிள வேனிற் காலம். வீசுதென்றல் நம் அறிவையெல்லாம் மயக்கி, அழகு காட்சிகளின் அடிமையாக்குகிறது. அந்நிலையில், தங்கத்தால் வார்த்த சிலை போல் ஒசிந்து கின்று, ஒண் தமிழின் இன்பமெலாம் வழங்கி, முல்லை முறுவல் காட்டி, முதிரா இளைஞர் ஆருயிரையெல்லாம் திருகும் ஒருத்தி தன்னந்தனியே மல்லிகைச் செடியினருகே ஏக்கம் நிறைந்த பார்வையோடு, எவ்வளவோ நேரம் தன் ஆருயிர்க் காதலனை எதிர்பார்த்து இருந்தபின், திடீரென, 'அதோ! வருகிறார்!' என அறிந்ததும், அமுதாறும் தன் தாடைகள், நாணத்தால் பெறும் அந்த அழகிய செந்நிற வண்ணம் தாங்க, செருக்குற்றுத் தலை நிமிர்ந்து, ஒடித்திரியும் காற்றால் உந்தப்பட்டு, ஆடிப்பாடி மகிழ்ந்திருக்கிறது போல மலர்ந்திருக்கிறது, அதோ உள்ள அந்த அழகு ரோஜா ஆசையோடு அதைப் போய் வெடுக்கெனப் பறியுங்கள் பார்ப்போம்! ஆ! சுரீலெனக் கையில் முள் குத்துகிறது.

***