பக்கம்:உணர்வின் எல்லை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

உணர்வின் எல்லை


கட்கும் வேறுபாடே இல்லாமல் அல்லவா போய் விடும்!

பரத்தை சொன்னaள் : ஆற்றில் புது வெள்ளம் வந்து விட்டது; யான் என்னுடைய கூ ங் த லி ல் முழுமையாய் இருக்கும் ஆம்பல் மலர்களைச் செருகிக் கொண்டு பெரிய நீர்த்துறையில் ஆடி மகிழ்வதற்குத் தலைவனோடு செல்லப் போகின்றேன்; உண்மையிலேயே இந்தத் தலைவி அவ்வாறு நான் இவள் தலைவனோடு செல்வது தகாது என அஞ்சுவளாயின், பகைவரை, நடுவுநிலை உண்டாகும்படி, வஞ்சியாது எதிர் நின்று கொல்லும் பல்வேறு படையுடைய பெருங்கொடையாளி -மாவீரன்- கடையெழு வள்ளல்களுள் தலை சிறந்த கருணையாளன்-அதிகமான் எனப்படும் எழினி, தன் நாட்டுப் பசுக்களைப் பகைவர் கவர்ந்து சென்ற செய்தி கேட்டுச் சீற்றம் கொண்டு, அப்பகைவரோடு போரிட்டு அப்பசுக்களை மீட்டுக் காத்தான் அல்லவா?-அவ்வாறே இவளும் உண்மையிலேயே தன் தலைவன் செயல் கண்டு அஞ்சுபவளாயின், வரட்டும் வெளியே; வந்து தன் கொழுநனை-கொழுநன் மார்பை-காப்பாற்றட்டும்!’ என்றாள். அரசியல் பண்பும், வரலாறும் அறிந்த அந்தப் பரத்தையின் வீரமே வீரம்!

***

இந்தச் செய்தியை, சங்கப் பாட்டைப் படிக்கும் போது சிரிப்பு எதற்கு? என்று என்மேல் சந்தேகம் கொண்டு கேட்ட சொக்கலிங்கத்திடம் யான் விளக்க