பக்கம்:உணர்வின் எல்லை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

உணர்வின் எல்லை


இந்த அழகிய பாடலை அவனுக்குச் சொன்னேன். முத்துமுத்தான எழுத்துக்களில் அவன் இந்தச் சங்கப் பாடலை ஆர்வத்தோடு எழுதிக் கொண்டான். அப்போதும் அவனுக்குச் சிரிப்புத்தான் : 'என்னப்பா சிரிக்கிறாய்? என்றேன், சொக்கலிங்கத்தைப் பார்த்து, நானும் சிரித்துக் கொண்டே இல்லை........என்ன வீரம், பார்த்தாயா அந்த் அரசியல் பரத்தைக்கு? என்று கூறி மேலும் சிரித்தான், நண்பன் சொக்கலிங்கம். 'இந்த உலகில் நல்லவர்களின் அடக்கமும் ஒழுக்கமும், பொல்லாதவர்களுடைய ஏளனத்திற்கும் வெற்றிக்கும், எவ்வளவு எளிதில் பயன்படுகின்றன, பார்த்தாயா?' என்றேன். சிரித்துக்கொண்டிருந்த நண்பன் சொக்கலிங்கத்தின் நெற்றியில், சிந்தனைக் கோடு ள் விழ ஆரம்பித்தன!