பக்கம்:உணர்வின் எல்லை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

உணர்வின் எல்லை


சலித்துக்கொண்டான் நம்பி. 'அட, என்னப்பா அது! அரசியல் என்றால் கற்கண்டு என்பாய்; சோறு தண்ணீர் எல்லாம் மறந்து, கொடிபிடித்துக் கொண்டு ஊரெல்லாம் சுற்றுவாய்; இப்பொழுது என்னவோ அரசியல் என்றால் எட்டிக்காய் தின்றவன் போல் முகத்தைச் சுளிக்கிறாயே!’ என்றான் குறும்பாக, செல்வம்.

'ஆமாம்; வேறென்ன செய்வது! இந்த அரசியல், மேற்போக்காகப் பார்த்தால் கற்கண்டுதான்; ஆனால், உள்ளே நுழைந்தால் எட்டிக்காய்தான். எல்லாம் 'புறஞ்சுவர் கோலம் செய்த கதைதான்! “ என்றான் நம்பி.

'ஆமாம், ஆமாம், அரசியல் அப்படித்தான் ஆகிவிட்டது! நேர்மை, ஒழுக்கம், நீதி, தியாகம் இவற்றைத் துச்சமாய்-துரும்பினும் இழிந்ததாய் -மதிப்பவர்க்கே இன்றைய அரசியலில் ஆதிக்கம்! “ என்றான் நம்பி.

அதிலென்ன சந்தேகம்? நேர்மை, ஒழுக்கம், நீதி, தியாகம் இவையெல்லாம் யாருக்குத் தேவை? பணம், பசப்பு, இலஞ்சம், வஞ்சம், த ஞ் ச ம் , சூழ்ச்சி இவை எல்லாந்தான் இன்றைய அரசியல் ஆதிக்க மாளிகைக்கு விரைவில் ஏறப் பயன்படும் சரியான இரும்பு ஏணிகள்!’ என்றான் செல்வம். நம்பி பெருமூச்சுவிட்டான்.