பக்கம்:உணர்வின் எல்லை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

யின் விளைவாகிய இக்கட்டுரைத் தொகுதியை அப்பெருந்தகையின் மலரடிகளில் காணிக்கையாக்கி வணங்கிவேண்டுவது நன்றியுணர்வுடைய தமிழ் மாணவனின் தலையாய கடமை அன்றாே:

இந்நூல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திவான் பகதூர் உயர்திரு தி. மு. நாராயணசாமிப்பிள்ளை எம்.ஏ., பி.எல்., அவர்தம் அன்பார்ந்த அணிந்துரையாக புகழொளி எய்தியுள்ளது. யான் பிறந்த நாள் முதல என்னைத் தனது அருமைக் குழந்தைகளுள் ஒருவனுகவே கருதி வளர்த்து வாழ்த்தி வரும் அப்பெருங்கருணையாளரின் அருளுடைமைக்கு யான் என்ன கைம்மாறு செய்ய வல்லேன்? இன்னும் பல்லாண்டு பல்லாண்டு அவர்தம் பாதுகாப்பில் யான் வாழ இறைவன் அருள் புரிவானாக!

இந்நூலின் கையெழுத்துப் படியைக் கண்ணுற்றுத் திருத்தங்கள் செய்துதவிய மகா வித்துவான் உயர்திரு மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்கட்கும் அச்சாகுங் காலத்து பிழை திருத்தம் செய்த அருந்தமிழ் அறிஞர் உயர்திரு. சி. அருணைவடிவேலு முதலியார் அவர்கட்கும் யான்மாறா நன்றி பாராட்டுங் கடப்பாடுடையேன். இந்நூலே அழகுற அச்சிட்டு உதவிய முத்தமிழ் அச்சகத்தார்க்கும் விற்பனை உரிமையை ஏற்றருளும் பாரி நிலையத்தார்க்கும் என் உளமார்ந்த நன்றியறிதல் உரியது.

வாழிய செந்தமிழ்!

வாழ்க நற்றமிழர்!

ந. சஞ்சீவி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்வின்_எல்லை.pdf/7&oldid=1375045" இலிருந்து மீள்விக்கப்பட்டது