பக்கம்:உணர்வின் எல்லை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

உணர்வின் எல்லை

 கொண்டே, 'வாப்பா நம்பி எங்காவது போய் வரலாம்,' என்று எழுந்தான் செல்வம்.

நம்பியும் கவலை நிறைந்த முகத்தோடு, களையற்ற பார்வையோடு அவனைத் தொடர்ந்தான்,

நண்பர்கள் உரையாடலை, என் வீட்டின் திரையிட்ட சன்னலின் பின்னே உட்கார்ந்து கவனித்துக் கொண்டே இருந்த என் கைகளும் கருத்தும், ஏனோ பரபரப்படைந்தன எதிரே இருந்த ஒரு திங்கள் வெளியீட்டை எடுத்தேன்; புரட்டினேன். ஒரு பக்கத்தில் அரசியல் போக்கிரிகளின் கடைசிப் புகலிடம்’ என்ற மேல் நாட்டுப் பேரறிஞர் ஒரு வரின் பொன் மொழிகள் கொட்டை எழுத்துக்களில் கட்டமிட்டுப் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். பெருமூச்சு விட்டுக்கொண்டே எழுந்தேன். சுவரிலிருந்த தமிழ் முனிவர் திரு. வி. கவின் படம் என் கண்களிற்பட்டது. தியாகமே வடிவான அந்தச் சான்றாேர், மனம் எவ்வளவு புண்ணாகி நெஞ்சம் குமுறியிருந்தால்-'கொள்ளை எரி அரசியல்' எனக் கூறியிருப்பார்!’ என்று நினைத்தேன். என் கண்கள் கலங்கின.

கண்ணும் மனமும் கலங்கி உட்கார்ந்திருந்த நான் எதை எதையோ எண்ணிக்கொண்டு எழுந்து, எங்கள் வீ ட் டி ன் புறக்கடையிலிருக்கும் சிறு தோட்டத்தை நோக்கி நடந்தேன். அங்கே கிடந்த ஒரு பலகை மீது அயர்ந்து உட்கார்ந்தேன்.