பக்கம்:உணர்வின் எல்லை.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருத்தமான உவமை

63

சுற்றிலுமிருந்த செடிகளையும், கொடிகளையும், காய்களையும், கனிகளையும், மலர்களையும், மரங்களையும் பார்த்துக்கொண்டே, நேரம் போவது தெரியாமல் இருந்தேன்.

மாலை 7 மணி இருக்கும்; தோட்டத்தில் உட்கார்ந்திருந்த எனக்கு, யாரோ வீட்டின் முன் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. எழுந்துவந்து பார்த்தேன்; நம்பியும் செல்வமும் நிற்கக்கண்டேன்; உள்ளே அழைத்து வந்து உட்காரச் செய்தேன்.

‘என்னப்பா செய்தி?’ என்றேன்.

‘ஒன்றுமில்லே! செல்வம் வந்திருந்தான். பேசிக்கொண்டிருந்தோம்! வெளியே போகலாமென்று நினைத்துப் புறப்பட்டோம். சிறிது தூரம் சென்றாேம்; மழை வருவதுபோல இருந்தது. திரும்பி விட்டோம். உன்னிடம் வந்து சிறிது நேரம் பேசி விட்டுப் போகலாமென்று வந்தோம்!’ என்றான் நம்பி.

‘ஓ! சரிதான்! ஏதாவது சாப்பிடுகிறயா?’ என்றேன்.

‘ஒன்றும் வேண்டா; கண்ணிர் கொடு; ஒரு குறுந்தொகைப் பாடலைக் கூறிப் பொருள் சொல்லு; அது போதும்!’ என்றான்.

‘என்னப்பா அரசியல் வாதிகளுக்குக் குறுங்தொகையில் அவ்வளவு பைத்தியம்!’ என்று கூறிக்