பக்கம்:உணர்வின் எல்லை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொருத்தமான உவமை

67


அதை நம்பி வாழ்க்கையைத் தொடங்குவதும், சோம்பி இருப்பதும் அவன் ஆண்மைக்கே பேரிழுக்காகப்பட்டன. அவன் தன் திருமணத்திற்கான செலவையுங் கூட, தானே பாடுபட்டுத் தேடிச் செய்ய விரும்பினான்.

நம் குறுக்தொகைப் பாடலின் அருமைத் தலைவனும் அத்தகைய மனப்பண்புடையவனே ஆவான். எனவே, எவ்வாறேனும் தன் ஊரை-நாட்டைவிட்டு வெளியிடம் சென்று வாணிபத்தால் பொருள் தேடி வரத் திட்டமிட்டான். ஆனால், தன் திட்டத்தைத் தலைவியிடம் கூறும் துணிவு அவனுக்கில்லை. அவள் மிக மென்மையான உணர்வு படைத்தவளாயிற்றே ! முன்னாள் இரவு கண்டு பழகியபின் மறுநாள் இரவுவரை கூட மனம் பொறுத்திருக்க முடியாதவளாயிற்றே! இன்னும் ஊரறிய - உலகறிய - திருமணமாகாத நிலையில் நெடுந்தொலைவு சென்று நாம் பொருள் தேடப்போகும் செய்தி அறிந்தால், அவள் எவ்வாறு பொறுப்பாள்! அழுதழுது புலம்புவாளே! என்று நினைத்தான். வாழ்க்கையைச் செம்மையுற அமைப்பதற்காக-பொருள் தேடி வருவதற்காக - பாலை நிலத்தையும் கடந்து போக அஞ்சாக அவன் நெஞ்சம், தலைவியின் அன்புள்ளத்தையும் மென்மைப் பண்பையும் நினைத்துப் பாகாய் உருகியது. என்றாலும், என் செய்வான் ! கடமைகளைப் புறக்கணித்தால் காதல் வாழுமோ ? ஒருவாறு மனத்தைத் தேற்றிக்கொண்டான். அப்போதும் நேராகத் தலைவியிடம் சொல்ல அவன்