பக்கம்:உணர்வின் எல்லை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

உணர்வின் எல்லை


செய்த நன்றியைப் போற்றி நீங்கள் திருமணம் செய்துகொண்டால், எங்கள் அருமைத் தலைவியின், மகிழ்ச்சியால் ஆடி ஆரவாரிக்கும் மயிலின் தோகையைப் போன்ற அழகான கூந்தலினத் தீண்டிப் பெறும் இன்பம்-உரிமை இன்பம் -பேரின்பம்-என்றென்றும் உங்கட்கே உரியதாகும் ! என்று கூறினாள்.

தோழியின் சொற்களைக் கேட்ட தலைவனது - உள்ளம், உணர்ச்சிக் கடலாயிற்று. அவன் வாய் ஏதும் பேசும் வல்லமையை இழந்தது. பிறிதொரு மாற்றம் பேச முடியாத வகையில் நன்றி உணர்ச்சி நிறைந்த கண்களோடு எங்கோ பார்த்துக்கொண்டு நின்றன் அப்பெருந்தகை. ஆம்; அவன் உள்ளத்தில் தோழியின் சொற்கள், எய்த அம்பு போலப் பதிந்துவிட்டன. அவன் உள்ளம் - உணர்ச்சி நிறைந்த உள்ளம்-பிரைமோர் பட்ட பால் போல இறுகிக் கெட்டியாகிக் கொண்டிருந்தது. அவன் உணர்ச்சியைவிட உறுதியே அதிகமாகப் படைக்க மனிதனாகிவிட்டான்.

இவ்வாறு ஆணுக்கும் அறிவுரை-அறவுரைகூறும் ஒரு பெண்ணரசியின் தோற்றத்தை-அவள் அமுத மொழிகளைத் தம் அகக் கண்களால் காண்கிறார் ஒரு புலவர்; தம் அகச் செவிகளால் அவள் பேச்சையும் கேட்கிறார்; தம்மை மறக்கிறார். தாமே தோழி ஆகிறார். அவர் உள்ளத்து உணர்ச்சி பொங்கி ஆற்று வெள்ளம்போல வேகம் கொள்கிறது. தமிழ் வாழும் அவர் திருவாயினின்றும்