பக்கம்:உணர்வின் எல்லை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

உணர்வின் எல்லை

கரந்து செல் வழிகள் இருந்தன. ஆடல்வல்லார் தங்கி வேடம் முதலியன புனைதற்குரிய தனி அறைகளும் இருந்தன எனக் கூறுவர் ஆராய்ச்சியாளர். பழந்தமிழ் நாடக மேடையில் மூவகையான திரைகள் இருந்தனவாம். ஷேக்ஸ்பியர் காலத்தில் மேலை நாடுகளிலும் இல்லாத இப் புதுமை, சிலப்பதிகார காலத்தில் இருந்ததெனத் தோன்றுகிறது. அம் மூவகைத் திரைகளையும் ஒருமுக எழினி, பொருமுக எழினி, காத்துவரல் எழினி என்று சிலப்பதிகாரம் சுட்டுகின்றது. ஒரு முக எழினி என்பது ஒரு பக்கம் தள்ளக் கூடிய திரை; பொருமுக எழினி என்பது இடை கல் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரு பக்கங்கள் லிருந்தும் தள்ளக்கூடியதாகும்; கரந்துவரல் எழின் என்பது மேலே இருந்து கீழே வரவும் கீழே இருந்து மேலே செல்லவும் கூடிய திரை, அடியார்க்கு நல்லார் உரையில், ‘ஆகாயசாரிகளாய்த் தோன்று வார்க்கு எனக்கொள்க,’ என்ற மேற்கட்டுத் திரை பற்றிய குறிப்பொன்று உள்ளது. இதைக்கொண்டு பழந்தமிழ் நாட்களில் ஆகாயசாரிகட்கும் இடம் இருந்தது என்பது விளங்குகிறது. வேண்டிய போது சுருக்கிக்கொள்ளும் திரை ஒன்றைச் ‘சுருக்கும் சஞ்சிகை’ என்று பெருங்கதை குறிப்பிடுகின்றது. அச் சிறந்த நூல் வாயிலாகப் பழந்தமிழ் நாடக மேடையில் கதைக்கு ஏற்பப் பின்னணிக் காட்சியாக,

‘கொடியும் மலரும் கொள்வது எழுதிப்
பிடிங் களிறும் பிறவும் இன்னவை

வடிமாண் சோம்பொடு வகையெற வரைந்து’