பக்கம்:உணர்வின் எல்லை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

உணர்வின் எல்லை

பண்டுதொட்டுத் தமிழகத்தில் தமிழ் நாடகக் கலை சிறப்புற்றிருந்த செய்தியை இதுவரை கண்ட நமக்கு, கிரேக்க மொழியிலும், வடமொழியிலும் உள்ளது போலத் தமிழ் நாடக இலக்கியம் ஒன்று கூடக் கிடைக்காமல் இருப்பது பெருவியப்பையே அளிக்கும். இதற்குரிய தெளிவான காரணம் என்ன வென்பது இன்னும் புலனாகவில்லை. ஆயினும், இப் புதிர்பற்றி நாடகப் பேராசிரியராகிய பம்மல் சம்பந்த முதலியாரவர்கள் ‘நாடகத் தமிழ்’ என்னும் தம் அரிய நூலில்

‘தமிழ் நாடெங்கும் அநேக நூற்றாண்டுகளாக வேறு வேறு அரசர்கள் மாறி வந்ததனாலும், யுத்தங்களினால் வந்த குழப்பங்களினாலும் தமிழ்ப்பாஷையை ஆதரிப்பார் குன்றிக்கொண்டே வந்தனர்; இசை கால்களும் நாடக நூல்களும் இல்வாழ்க்கைக்கு இன்றியமையாதன அல்ல....... ஆகவே, அநேக நூற்றாண்டுகளாக மேற்சொல்லிய காரணங்களினால் இசை நூல்களாக நாடக நூல்களையும் கற்பார் மிகச் சிறிதாகவே இருந்திருக்க வேண்டும். அவைகளைப் பாதுகாக்கவேண்டிப் பழைய பிரதிகளினின்றும் புதுப் பிரதிகளுக்குப் பெயர்த்தெழுதும் கஷ்டத்தை மேற்கொள்வார் அதனினும் சிறிதாக இருக்க வேண்டும் என்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை.’

எனக் கூறும் காரணம் ஒருவாறு நமக்குச் சமாதானம் அளிப்பதாய் உள்ளது.

சங்க காலத்தில் மிகு உச்சநிலையை அடைந்து சிறப்புற்றிருக்கக் கூடும் என்று நம்மால் தக்க காரணங்களோடு நம்பப்படும் தமிழ் நாடகக்கலை மீண்டும்