பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சனை 磐莎 உள்ளே காட்டினேன். இது கட்டண வழி. உங்களுக்கெல்லாம் ஒன்பது மணிக்குத் தரும தரிசனம். அப்போ வாரும்." இருபது வருடங்களுக்குமுன், எனக்கு நினைவு தெரிந்து, என் முதல் நீண்ட பிரயாணத்தில் அதுதான் முதல் ஷாக்.” சென்னையில் காபாலி கோவில், கந்தகோட்டம்ஆனால் க்லுப்தமாக கோவிலுக்குப் போவோரில், நான்: அல்லன். அதற்கும் கொடுப்பனை வேண்டும். ஆமாம், இங்கே காந்திமதி அம்மன் சன்னதியில் நின்று கொண்டு, மீனாட்சி, கற்பகாம்பாள் பெருமையைப் பேசிக் கோண்டிருக்கிறேனே என்ன நியாயம்? இவளைப் போலத்தான் ஆள் உயரத்துக்கு, எங்கள் பெருந்திரு. எனக்கு வயது பத்து, பன்னிரண்டில் சென்னையி லிருந்து லால்குடிக்கு வர நேர்ந்த ஒரு ஆர்வ சமயத்தில், அண்ணா-அதான் அப்பா சன்னதியில் சொன்னது இப்போ ஞாபகம் வருகிறது. "ராம், லால்குடியில் நமக்கு வேறு சொத்து கிடையாது: இதோ இவள்தான் நம் குடும் சொத்து, நம் எல்லாதே இவள்தான்." அப்ாதுச் சொல்கையில் அவருக்குக் கண் துளும்பிற்று. அப்போ எனக்குப் புரியவில்லை. இப்பவும் முழுக்கப் புரியவில்லை. ஆனால் இப்போது இங்கே எனக்குக் கண்கள் தவறிக்கின்றன. பெருகி கன்னங்களில் வழிகிறது. அம்மா! நீ காந்திமதியோ, மீனாட்சியோ கற்பகமோ,