பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9岛 லா, ச. ராமாமிருதம் ஆரம்பித்த புள்ளிக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது-நான் தூங்கவில்லை. நடந்துகொண்டே கனவு கண்டுகொண்டி ருக்கிறேன். காலத்தைத் தாண்டி காலத்தின் உள் கழியுள். மனம் வைத்தால், இந்தப் பெரிய வீட்டில் ஒரு திண்ணை யில், துண்ணோடு கயிறை அனைத்து, யசோதா ஆத்தா தயிர் கடைந்து கொண்டிருப்பதைக் காண முடியும் அவளுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவள் பரந்த முதுகில் தொங்கிக் கொண்டு போக்கிரிப் பயல், அவள் காதுமடலை (சற்று அழுத்தமாகவே) கடிக்கிறான். மயிலிறகு அவள் தெற்றிப் போட்டில் குறுகுறு 'ஹே கிருஷ்ணா: குருவாயூரப்பா!' சன்னதியில் கோஷம் எட்டுகிறது. நான் போதையிலிருக்கிறேன். ஒரு திண்ணையில் நம்பூத்ரி சந்தனமும் தீர்த்தமும் வழங்கிக்கொண்டிருக்கிறார். அவரிடம் போய்க் கை ஏந்து கிறேன். "டிக்கட் வாங்கியிருக்கா?" திறுதிறு'டேய்! அப்பா சில சமயம் முழிக்கறதைப் பார்த்தால், நடிக்கிறார் இல்லை?” 'இல்லை. நட்சத்திரத்தை விழுங்கியிருக்கிறார்." "அதோ அவ்விட கெளன்டர் நோக்கியோ? வாங்ஓ வரட்டோ அஞ்சு ருவா’’ - அங்கிருந்து, கோவிலிலிருந்து விலகுகிறேன். வெளியே, காலனிகளை விடும் (டிக்கட்டுக்குத்தான்; இடத்தை ஒட்டி அங்கே கிடந்த கல்லின்மேல் உட்காருகிறேன். இதென்ன திடீர்னு இப்படி ஒரு அசதி: "எங்கெலாம் அப்பா உங்களைத் தேடறது, ஏன் இங்கே உட்கார்ந்திருக்கேள்?’’