பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. நான் இது கதையல்ல. இது என்னைப்பற்றி. நான் அறிந்தவரை, என்னால் முடிந்தவரை, என் வேண்டிங்களைக் களைந்து என் தோல்களை உரித்த என்னைப் பற்றி. என்னிலும் எனக்கு வற்றாத, சுவாரஸ்யமான பொருள் இல்லை. அவரவர்க்கும் அப்படியே. ஆகையால் எப்பவும் தான் தான். நான் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட முறையில் எழுத்தாளன் இல்லை. நான் எழுத்தாளனே இல்லை, பேரிகை கொட்டுபவன். சுவபேரிகை போகும் வழியெல்லாம் கொட்டிக்கொண்டே போகிறேன். எனக்கேதான் கொட்டின் கொள்கிறேன் சில சமயங்களில், நான் எழுப்பும் சப்தம், பிறருக்கும். கேட்கிறது. அவர்களிலும் பொறுக்கானவர்களுக்கு அபூர்வ தாது, அவர்களுக்கே கொட்டுவதாய் அவர்கள் அடையாளம் கண்டுகொள்கையில் என் இறுமாப்பு எனக்குப் பொங்ஓ வழிகிறது. உ.-!