பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 2 3 லா, ச. ராமாமிருதம் பிசுக்காரம் செய்துகொள்ளாமல் கே ட் ட வு ட ேன அமர்ந்து பாடுவார்கள். மூத்தவளுக்கு நல்ல குரல். "ராமாமிருதம், உங்களுக்கு வேணுமென்கிற பாட்டு ஏதேனும் பாடச் சொல்லுங்கள். பாடுவார்கள். அவர் களுக்கும் ஒரு பிராக்டிஸ்தானே!’ சாமா ராகம் ஆலாபனை பண்ணிப் பாடும்படி கேட் டேன். அப்போது மவுசில் இருந்த மானஸ் ஸஞ்சரரே? பாடுவார்கள் என்று என் எண்ணம். ஆனால் அவர்கள் அந்தப் பாட்டைப் பாடவில்லை, மிக்க அவாவுடன் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆலாபனையும் செய்ய வில்லை. சட்டெனப் பாட்டில் இறங்கிவிட்டார்கள் (“குரு குஹா என்று நினைக்கிறேன்) அதுவும் மனமில்லாமல் , ஏதோ தயக்கத்துடன்தான், என்று எனக்குத் தோன்றியது. அவர்களுக்குப் பாடமில்லை என்று பிச்சமூர்த்தி சமா தானம் கூறினார். "தவிர, இந்த ராகம் நினைத்தமாதிரி யில்லை. சுத்தமாகப் பாடவேண்டுமானால் திரடல் உள்ளது நாம் இப்போ சாதாரணமாகக் கச்சேரியில் கேட்கிற ஆபேரி, ஆபேரியில்லை. ஹிந்தோளம். ஹிந்தோளமில்லை. தேவகாந் தாரி, தேவகாந்தாரியில்லை. அதுமாதிரிதான், ஜனரஞ்ச கத்தில், சம்பந்தமில்லாத ஸ்வரங்கள் கலக்க ஆரம்பித்து, பாடமே அதுதான் என்று ஸ்தாபிதமும் ஆகிவிட்டது. கலப்படம் எங்குதான் என்றில்லை. Music is it a charging fashion?’” சின்ன விஷயம், இதில் என்ன இருக்கிறது என்று நினைப்பவர் நினைக்கலாம். எனக்கு அப்படியில்லை. கேட்கும் சூழ்நிலையில், வேளையில், சந்தர்ப்பத்தில், அதனதன் இடத்தில் அது அது பெரிதுதான். எழுத்து, ஸங்கீதம், கலை, இவைகளுடன் நல்தன்மையும் சேர்ந்து