பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; f 参 க. சிதம்பர சுப்பிரமணியம் கான் எஸ்.எஸ். எல்.சி (இன்றைய பத்தாம் வகுப்பு) படித்துக்கொண்டிருந்த சமயம், என் சித்திப்பாவுடன் திருவட்டீஸ்வரன் கோவில் குளத்துச் சந்து வடக்கோடி வீட்டில் இருந்தேன். நடு முற்றத்தைச் சுற்றி மூன்று குடித் தனங்கள் (நாங்கள் ஒன்று), மாடியில் தனிக் குடித்தனம், சந்து வீடு என்றதும் மூக்குத் தண்டு சுருங்குகிறதா? அப்படி, சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். வார வாரம் ஒரு கிழவர் மாடியிலிருந்தவர்களைப் பார்க்க வருவார், மாடியேறிப் போவார். 'இவாள் பார் தெரியுமா?’ சித்தப்பா என்னை உரத்த ரஹஸ்யத்தில் கேட்பார். பெரியவருக்கும், சித்தப்பா நின்று கொண்டிருந்த இடத்துக்கும் யாது சம்பந்தமும் இருக்காது. ஆயினுக்கும் அவருக்கு வழி விடுவதுபோல, ஒதுங்குவார். விழிப்பேன்.

யூ ஃபூல், அவர்தான் தrனோத்ய கலாநிதி மஹா கஹோபாத்யாய பண்டித உ.வே. சுவாமிநாத ஐயர்டா!' அப்பவும் விழிப்பேன். என் தமிழ் மணம் அப்படி: