பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱多舒 லா. ச. ராமாகிருதம் டோபா மயிரை நெற்றியிலிருந்து பின்னுக்கு அழுந்த வாரி, முடிப் பிரிகள் சுருண்டு, பிடரியில் குஞ்சங்களாய்த் தொங்க... சித்தப்பா மூக்கைப் பிடித்துக்கொள்வார். அவருக்கு ஜவ்வாது, ஏன், எந்த வாசனையுமே ஆகாது. அது போகட்டும்; வித்வான் ஏன் மையிட்டுக் கொண்டிருக்கிறார்? எனக்கு ஆச்சரியமாயிருக்கும். ஆண்கள் கூடவா? அவரும் போய்விட்டார். எனக்கு இன்னும் வேலை கிடைத்தபாடில்லை. தட்டெ ழுத்தும் குட்டெழுத்தும் சின்னப் பரீrை தேறினேன். சென்னைப் பல்கலைக்கழக லைப்ரரியில், வாசகர்களின் பெயர்ப் பதிவு ஏட்டில், என் பெயருக்குப்பின் பி.ஏ. என்று பொய் சேர்த்துக் கொண்டு, உள்ளே சென்று, மேனாட்டு இலக்கியங்களைப்-படிக்கவில்லை, விழுங்கினேன். உள்ளே பற்றிக்கொண்டுவிட்ட ஆக்கசக்தி வடிகால் தேடித் தவித்தது. நானும் எழுதணும். எப்படி, என்ன, எதை? தவிப்பே அதுதான். மாடி கொஞ்ச நாள் காலியாகக் கிடந்தது. வாடகை களையாய் ரூபாய் பதினெட்டுக் கொடுத்துவரச் செயல் வேண்டாமா? ஏதேனும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு மாடியில் தனிமையில் உட்கார்ந்திருப்பேன். புத்தகம் மடியில் விரித்த படி கவிழ்ந்து கிடக்கும். இந்தக் கூடத்தில், பாண்டித்யமும் ங்ைகீதமும் நடமாடியிருந்திருக்கின்றன என்கிற எண்ணத் திலேயே மர்மமான கவர்ச்சி தெரிந்தது. "அப்பா, உப்பரிகையிலிருந்து இறங்கி வரையா? அட்வான்ஸ் வாங்கியாச்சு. ’’ இளஞ்ஜோடி அம்மா.