பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 28 லா ச. ராமாமிருதம் என் நண்பன் சம்பந்தப்பட்டு, ஆனால் நிச்சயமாக அவன் உதவியால் goal-‘Short story" or good oftālā, மாதப் பத்திரிகையில் என் முதல் கதை பிரசுரமாகியது. அடுத்தடுத்து என்னுடைய மூன்று கதைகள், மணிக் கொடியில் வந்தன. என்னை அறியாமலே என் நடையில் சேவல் புகுந்து கொண்டது. லேசாகத்தான். ஆனால் சேவல். பிறகு ஒரு மாலை, ('ராமாயிருதம், உனக்கு ஒரு ஸ்ர்ப்ரைஸ்:") என் நண்பன், பிர விடென்லி காலேஜ் மணிக்கூண்டெதிரில், மரீனாவில் கடிப் பேசும் மணிக்கொடி எழுத்தாளர்கள் குழு வுக்கு அழைத்துச் சென்றான். அதில் குளத்துச் சந்து வீட்டு மாடியில் குடியிருக்கும் இவர் இங்கே, எப்படி? யாரோ: 'இவர்தான் சிதம்பர சுப்பிரமணியம்." அங்கே விழிமுகம். இங்கே அறிமுகம், தளதனவென்று, பூசினாற்போன், மயிர். கதர் அரைக்கைச் சொக்காய் மேல், சவுக்கத்தைச் சால்வை போல் போர்த்தியிருந்தார். ஆனால், அவர் என்னை அடையாளம் கண்டுகொள்ள வில்லை. அடையாளம் கண்டுகொள்ள விருப்பப்படவில்லை என்று தோன்றிற்று சுண்டல்காரப் பையனிடம் எனக்கும் என் நண்பனுக்கும் அளக்கச் சொன்னார். (இதெல்லாம் விஷயமா என்கிறீர்களா? எங்களுக்கு அப்போது-அது பேசி: விஷயமாய்த் தானிருந்தது ; என்னை இங்கே இப்படிப் புதுமுகமாகப் பார்ப்பது எனக்கு ஆத்திரமாக வந்தது. ஏன்? நானும் அடியெடுத்துக் கொடுக்கவில்லை. அப்புறம் சித்தப்ப வீட்டுக்கு நான் போக தேர்ந்தபோதுகூட அவரைச் சத்திக்கவில்லை.