பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 லா. ச. ராமாமிருதம் பதிலாக அவர்கள் பேச்சில் அவன் கேட்பதென்ன? அவளு, டைய ஆடை ஆபரணங்களையும் அங்க நேர்த்திகளையும் ரவித்துககொண்டிருக்கிறார்கள் கேலியாகவும், கிண்டலா கவும்.குன்றிப் போகிறான். பல வருஷங்களுக்கு முன் படித்தது. இதில் ஆசிரியர் அச்சுறுத்துவது எந்த உயர்ந்த லகசியமோ, அழகோ எப்பவும் அதைச் சூழ்ந்துகொண். டிருக்கும் ஆபாசம், அவலத்தின் பாதிப்பிலிருந்து முற்றிலும் தப்பமுடியாது. அப்படித்தான் கதையை நான் காண்கிறேன். ந.சி.யின் தமிழ்நடை தெளிந்த நீரோடை போன்றது. எளிமையான சொற்கள் ஸ்படிகச் சிதர்கள் பேணல், தி.ஜ.ர. ஒரு தடவை சொன்னார். இன்னும் மறக்க வில்லை: "ஒ அவருக்கென்ன மனுஷன் எப்பவும் இசை, இலக்கியம், கலை என்கிற சூழ்நிலையிலேயே உழல்கிறார். அதையே சுவாசிக்கிறார். அவர் நன்றாக எழுதுவதற்குத் கேட்கணுமா?" இதய நாதம் (பேரே பாருங்கள், அதிர்வுகள் கேட்க வில்லை), தமிழ் நாவல் இலக்கியத்தில் ஒரு மைல்கல். அதில் அவருடைய கலையின் செழிப்பு முழுக்கத் தெரிகிறது. இது தோன்றியதும் அதன் பரபரப்பும் சக்தியும், மக்கள் நினைவில் வெகுநாள் தங்கியிருந்தது. அதன் கிண் கிண்" இன்றும்கூடச் செல்லுபடிதான். தன்னுடைய கலையை அவர் கறிவேப்பிலைக் கன்றைப் போல் பராமரித்து வளர்த்தவர். வளர்த்தவர்களுக்குத்தான் கன்றின் அருமை தெரியும். ஆதர்சக் கலைஞன் அப்படித்தான் இருப்பான். பாராட்டுதலிலும் அவர் மனத்தாராளம் மிக்கவர், *ராமாமிருதம், மணிக்கொடியில் மூன்று கதைகள் அடுத் தடுத்து உங்களுடையது வந்தனவே- "புலியும் முயலும் ,