பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 2. பிராயச்சித்தம் குங்குமம் ஆசிரியருக்கு: குங்குமம் செப். - 7 தேதி இதழில் என்னைப்பற்றி ந. சிதம்பர ஸுப்ரஹ்மண்யனின் கட்டுரையைப் படித்ததும் ஆச்சர்யமடைந்தேன். சற்றுப் பொறி கலங்கினமாதிரியே ஆகிவிட்டது. ஏனெனில் முதன் முறையாக நானே இப்பத் தான் படிக்கிறேன். எப்போது, எந்தப் பத்திரிகையில் வெளி யானது; எங்களுக்குள் நெருக்கமான பழக்கமிருந்தும் அவர் என்னிடம் குறிப்பாகக்கூட உணர்த்தவில்லை? காரணம் , அவருக்கே இயல்பான சங்கோஜமா? அல்ல, தம்பட்டமத்த அவருடைய பெருந்தன்மையா? இந்தக் கட்டுரை தெளிவுபடுத்தியிருக்கும் அளவுக்கு, அவன் என் எழுத்தின்மேல் வைத்திருந்த அபிப்பிராயத்தை என்னிடம் நேரிடையாகச் சொன்னதில்லை. அவருடைய மனோவிலாஸ்த்துக்கு, விசாலத்துக்கு இதைவிடச் சான்று வேண்டாம், அந்தக் காலத்தில் எழுத்தாளர்களும் அவர்கள் ஆக்கத்தின் அளவும் குறைவுதான். ஆனால் அவர்கள். கடைப்பிடித்த மரபே தனி. கட்டுரையைப் படித்ததும் எனக்குக் கிளறிவிட்ட மாதிரியாகிவிட்டது. .