பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. - இதழ்கள் வசுதேவ தவ பாலனே கம்பளி அடைப்புக்குள் சுகமான இருளுள் கதிகதி இகையடியில் ஆழ்ந்துபோன தன் இழப்புள் மினு மினு உருகும் வெள்ளிப்பாகின் இழையென துழைந்து அசுர குல காலனே அம்மாவின் குரல் நினைவைச் சுற்றிப் பற்றிக் கவ்வி இழுக்கிறது. தேவகி மைந்தனே யசோதையின் செல்வனே பிருந்தாவன லோலனே எழுந்திரும் அம்மாவின் குரலில் எப்பவுமே ஒரு இம்மி இனிப்பு கூடுத லாகிவிட்ட தெவிட்டல் உண்டு என்று எனக்கு அப்வே எண்ணம். அந்நாளில் கலியாணம் கார்த்தி கொலு போன்ற விசேஷங்களில் அம்மாவும் அத்தையும் சற்றுப் பிரசித்தமான