பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰器超 லா, ச. ராமாமிருதம் பாரு வேடுக்குனு தொடையில்-இல்லை, கூடாது. பாட்டு வெச்சான்னா அண்ணாவுக்குத் தூக்கம் கலைஞ்சு-அவ்வளவு தான் என் தோலை உரிச்சுடுவார். புர்ர்-பல் கிலுகிலுப்பை அடிக்கிறது. ஆனால் அம்மா குளிச்சாச்சு, பச்சைத் தண்ணிலே சுறுசுறுப்பா காரியத்தில் ഖണ്ഡ வரா. காரியம் இல்லாட்டாக்கூட, அம்மா கிாரியத்தை உண்டு பண்ணிப்பா, வாசற்கொறடில் பெரிய கோலம் உள்ளிலும் வெளி யிலும் காவியில் கரைகட்டி, கோலத்தின் நடுவே சாணியில் பூசணிப் பூவை நட்டு-ஒருவேளை அம்மா வெண் பொங்கல் பண்ணப்போறாளா? அதுதான் இன்னிக்கு இன்னும் சுருக்கக் காரியம் பாக்கறாளா? படிக்கட்டிலிருந்து இறங்கினதும் புல் துணிகளின்மேல் பனித்துளிகளின் ஈரம் சில்"னு-ஈரம் மண்டையைப் பிளக்கிறது. இப்படியே ஒரு மைல் நடந்தாகணும் , பட்டணத்திலிருந்து புதிதாகக் கிராமத்துக்கு வந்திருக் கும் எங்களுக்குத்தான் இன்னும் விடியலையே ஒழிய, தெரு வில் நடமாட்டம் நிறையவே இருக்கு ஆண், பெண் அத்தனை பேரும் இந்நேரத்திலிருந்து ராத்திரி வரை ஏதேனும் வேலையா இருக்கா இவாளுக்கு ஒய்ச்சல் ஒழிலே கிடையாதா? அதெப்படி முடியும்? அதுவே எனக்கு ஆச்சர்யமாயிருக்கு. இது ஒரு நெசவாளர் கிராமம் நேசவுடன் விவசாயம், இரண்டுக்கும் இடையில் கொஞ்ச நஞ்சப் போதுக்கு கோர்ட்டுக்கு அலைய வீட்டுக்கு வீடு ஒரு கேஸ் கட்டு. கேஸ் இருந்தால்தான் அந்தஸ்து, தெருவில் பாவு தோயப்போறது. ஏற்பாடெல்லாம் நடந்திண்டிருக்கு. பூமியில் கடப்பாறை அடிச்சு இறக்கும் சத்தம் கேட்கிறது.