பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள் 145 'உஷ் ராமு, கோவம் பண்ணாதே-’’ கன்னங்களைத் துடைத்தான். அளுவாதே-சந்தோஷமாயிருக்கத்தானே வந்திருக்கோம். இப்போ உனக்கு ஒண்னு காமிக்கப் போறேன். ஒரு அதிசயம்-’’ வயல்களின் நடுவே ஒரு திட்டில் நாங்கள் இப்போ நின்னுண்டிருந்தோம் புல் திட்டில் ஒரு மரம். மரத்தில் ஒரு பொந்து. "இதோ.பார் அதிசயம்-கு மந்தரக்காளி' பொந்துள் குனிந்து ஒரு மாதிரியா கொக்கரித்தான், என்ன ஆச்சரியம் பொந்திலிருந்து ஏதோ ஒண்னு வெளிப்பட்டு அவன்மேல் தாவி ஓடி, விரித்த அவன் கைமேல் இறங்கித் தங்கினது அணில். அவன் அதன் முதுகைத்தடவத் தடவ, அந்த அன்பில், செல்லத்தில் சுகத்தில் அது பெரி தாவதுபோல் எனக்குத் தோணறது. "இப்போ என்ன சொல்றே?" என்றான் பெருமையா. * டேய், டேப் நான் தொடறேண்டா!' 'உன்னைத் தொடவிடாது. அத்தோடு முன்னாலே ந ன் னா பழகியிருக்கணும். இது எப்படிக் கிடைச்சுது தெரியுமா? இதைப் பாம்பு வவுத்திலேருந்து கிழிச்சு எடுத்தேன். இதை முழுங்கறப்போ நான் பார்த்துட்டேன். உள்ளே உயிர்ோடு இருந்தது." இவன் எப்போ நிஜம் சொல்றான், எப்போ பொய் சொல்றான் தெரியாது. ஆனால் இவன் சொல்றதை நான் இப்போ நம்பியாகணும். ஏன்னா, இது இவன் இடம், இவன் வேளை, "டேய் டேய் ஒரே ஒருதடவை! ஆசையாயிருக்குடா, முருகா முருகா குதித்தேன். د 0}"-س ه. پهg