பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 லா, ச. ராமாமிருதம் 'சரி ஒழி. வாங்காதே. என் கையிலேயே இருக்கட்டும் உஜாராயிரு-" முதுகைத் தொட்டேன். பட்டாப் பட்டா-வால், ப்ரஷ்மாதிரி அவ்வளவுதான். நெருப்பு வெச்ச மாதிரி “கறில் விரல் துனியில் ஒரு சின்ன சிவப்புப் பொட்டு, உடனே பூவா பூக்க ஆரம்பிச்சிடுத்து. 'சொன்னாக் கேட்டியா? வாயிலே வெச்சு சப்பு: சப்பு:" சப்பினேன் உப்புக் கரிக்கறது. "'இதோ பார் என்னைப்பார், இதன் வாயிலேயே விரலை வெக்கறேன் பார்!’’ உடனேயே கூச்சல் போட்டு குதித்தான் வாயுன் விரலை வைத்துக்கொண்டான். அது அவன் கையிலிருந்து இறங்கி பொந்துக்குள் புகுத்து ஐயோ சிரிப்பே: திணறி, புரைக்கேறி-- தன்னா வேனும் என்னை என்ன பாடு படுத்தினான்: 激 攀 家 அண்ணா பள்ளிக்கூடத்திலிருந்துவரக்கூட நேரமாயிடுத்து அவாள்ளாம் விளையாடப் ரேஜிட்டா. ஆனால் அம்மா என்னை மட்டும் இழுத்துப் பிடிச்சி வெச்சிண்டிருக்கா. மயிரைச் சிக்கெடுக்கறா: பிராணன் போறது. "இது என்னடா, குதிரைக் காசாரியாட்டம் நாளைக்கே ஐயாக்கண்ணை வரச்சொல்லி கரைச்சுக் கொட்டச் சொல்