பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள் 149 இப்போது நான் அப்பா, அம்மா மட்டும்தான். கோவில்லே லோமாஸ்கந்தர் மாதிரி, தாத்தா காண்பிச் சிருக்கா எனக்கு எதுவும் மறக்காது. நான் தூக்கமும் வரமாட்டேன். இந்த நேரத்தை விடுவேனா? வீட்டுக்கெதிரே ஒரு மரம். அதுலே, மானத்துலேருந்து நகர்த்ரங்கள் உதிர்ந்தமாதிரி மின்மினிப் பூச்சிகள் அடை அடையா அப்பிண்டிருக்கும். மானத்துலே அப்படி வாரி பிரைச்சுக்கிடக்கு. இதெல்லாம் பட்டணத்தில் கிடைக்குமா? தலையை நிமிர்ந்து வானத்தைப் பார்க்கவே இங்கே வந்து தானே தெரிஞ்சுண்டோம்! - நாளைக்கு அமாசை, ஏன்னா அம்மா இன்னிக்கு இட்டிலிக்கு அரைச்சா. . 'ஏண்ணா, நமக்கு ஒரு வருஷம் தேவாளுக்கு ஒரு தாளாமே!’ "தாத்தா சொன்னா, இல்லியா?’’ "ஆமாம். அப்போ நாம் இப்போ இங்கே உக்காந்துண் டிருக்கற இந்த நேரம் அவாளுக்கு ஒரு கணக்குக்குக் கூட ஆகாதில்லியா?” 'அதனாலே?" "அவாமாதிரி நமக்கே இந்த நேரம் இவ்வளவு சுருக்கக் கழிஞ்சுடுமேன்னு வருத்தமாயிருக்கு எனக்கு." அண்ணா சிரித்தார். 'அட நீ சொல்ல வந்ததை இப்படி ஒரு உதாரணத்தோடுதான் சொல்ல வரதாக்கும்!'" 'அம்மா! அவன் யாராத்துப் பிள்ளை? தமிழ்ப் பண்டிதர் பேரன் இல்லியா?" 'இல்லேண்ணா, இந்த நக்ஷத்ரங்கள் என்னை இப்பிடி பேச வெக்கறது."