பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்காக 屋台丞 அதன் சேதிதான் என்ன? அது சொல்லில் அடங்காத சேதி. அது விக்ரமாதித்தன் கதை. தந்தப் பெட்டிக்குள் வெள்ளிப் பேழைக்குள் தங்கச் சம்புடத்துள் ரத்னச் சிமிழுக்குள் ஸ்படிகக் குமிழியுள் துளி விஷம். இது பாம்பின் மண்டையுள் மாணிக்கம் கட்டின கெட்டிப்பட்ட விஷத்திலும் கொடிது. பாற்கடலில் தோன்றி சிவன் விழுங்கிய விஷத்திலிருந்து ஒரு பனியிலும் பாதியிலும் பாதி அதன் நுண்ணியம் காண்பதற்கு இல்லை. ஆனால் காற்றுப் பட்டாலே, அமரத்வம், நித்யத்வத்தின் தனிமை, இத்தனையும் தந்து இவைகளால் பயன் என்னும் உணர்வை யும் தந்து சிவமாக்கிவிடும். அமுதினும் கொடிய சேதி. இவமான பின் அழுவதா? சிரிப்பதா? கொட்டிக் கொட்டிக் குளவியாகி...குளவி கொம்பேரி மூக்கனாகி... விடமுண்டு எஞ்சினவனுக்கு அமிர்தத்தால் ஆக வேண்டியது என்ன? சரி விடு விடு அத்தனையும் யூகம். ஆனால் இன்றைய யூகம் நாளைய தரிசனம், நிதர்சனம். "அத்தனையும் பித்து. இந்தத் தருணம்தான் என்ன? தருணம் ஒரு தரிசனம் ஒவ்வொரு தரிசனமும் ஒரு ஆரிப்பு: சாவு; புது ஜன்மா சட்டையுரிப்பு. இதெல்லாம் என்ன பிதற்றல் புரிந்தால் புரிந்துகொள், புரியாட்டி-போ. உ.-11