பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 லா, ச, ராமாமிருதம் தாங்கமுடியாமல் தவிப்பதில் என்ன களிப்பு உனக்கு? நாயின் கண்களைக் காட்டிலும் அழகிய கண்கள், நான் அறிந்தவரை இனிமேல்தான் காணவேண்டும். 'நான் ஏன் பிறந்தேன்? பிறந்தால் என்ன வாழத்தான் பிறப்பு நான் உனக்காக எனக்காக நீ இதற்குமேல் நமக்கு என்ன வேண்டும்? என்கிறதா? "உனக்கும் எனக்கும் உறவு இன்றா நேற்றா? இன்று, நேற்று நாளையேது? உனக்குத் தெரியவில்லை என்றால் என் கண்னைப் பார்!’ கீழே அதை விடுகிறேன். ஏதோ புது விளையாட்டு அதற்குத் தோன்றி அதன் பின்னால் ஒடுகிறது. என்னை அறியாமல் பெருமூச்செறிகிறேன். இந்த வயதில் நான் என் அம்மா இல்லையே என்று. ஆசைப்பட்டாலும், அளிகைப்பட்டாலும், விசனப்பட்டா லும் அது நியாயமா? மூன்று நாட்களாக அதைக் காணோம் புரியவில்லை : "'என்னடா ரீகாந்த்? உன் ஸ்வீகாரம் எங்கே?" "யார் கண்டது? அதுக்கே கால் முளைச்சுப்போச்சு, தாயோடு எங்கானும் போயிருக்கும். யாரானும் பிடிச்சுண்டு போயிருப்பான்: ' 'அவன் என்னடா பண்ணுவான்?" 'என்ன பண்ணுவான்? வளர்ப்பான்." என் கேள்வியின் அசடு எனக்குத் தெரியவில்லை. நெஞ்சில் கசண்டு. சரி யார் என்ன பண்ணமுடியும்? அதற்குக் கால் முளைத்துவிட்டால் அது வு ம் நியாயம்தானே. எங்கேயாகிலும் செளக்யமாயிருந்தால் சரி.