பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 லா, ச. ராமாமிருதம் அன்று நான் சீற்றம் கொண்ட வாலிபனாக இருந்தேன். # was an angry young man @or gy—g)336m of fissouபிரயாணமும் வந்துவிட்டேன். புருவங்கள் கூட நரைத்து விட்டன. இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறேன். எதற்கு? என் எண்ணங்களை, எரிந்துபோன கனவுகளை அசை போடுகிறேன். இப்படி மீண்டும். எண்ணங்களை, எரிந்துபோன கனவுகளை நினைவில் வரவழைப்பதில் காகிதக் கப்பல் பிரயாணத்தில் ஒரு புதுப் பரபரப்பை உணர்கிறேன். ஜன்னலுக்கு வெளியே, கைக்கு எட்டாத உயரத்தில் ஆடும் செம்பருத்திப் பூவின் சிரிப்பில், இருளில், படுக்கையில் என் முகத்தை எரிக்கும் யாருடையதோ பெருமூச்சில், அழுத கண்ணிர் காயுமுன், வானவில் போல், குழந்தை முகத்தில் வெடிக்கும் சிரிப்பில், இன்றோ, என்றோ, இனி எப்போ வேனுமானாலும் என் மரத்திலேயே பழுத்துக் கனத்துத் தக்கவன் பறிக்கக் காத்திருக்கும் கனியில், நள்ளிரவில் திடீரென, ஆனோ பெண்ணோ இருளை வெட்டும் வீறலில், தென்னையில் அவளுடைய கொண்டைபோல் முண்டிய இளநீர் முடிச்சில், அஸ்தமித்தபின் கூட்டுக்கு வழி தப்பி, பறக்கும் உயரத்தில் பறவை தெரியாது, பேடுக்குக் கொடுக்கும் குரலின் கூவலில், நள்ளிரவில் மொட்டை மாடியில் யாரோ ஒடுவது போன்ற திடும் திடு"மில் (திருடனா?) ஒரு ராகத்திலிருந்து ராகத்துக்கு இடையே அதை மாற்றத் துளிர்த்து நிற்கும் அனுஸ்வரத்தின் துடிப்பில்...