பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜனனியிலிருந்து சிந்தா நதி வரை 五*盛 1984. கடைசி ஒரு நாள் தினமணிக் கதிர் காரியால யத்துக்குச் சென்றிருந்தபோது, ஆசிரியர், 'வாரம் இரண்டு பக்கங்கள் உங்களுக்காக ஒதுக்குகிறேன், எழுதுங்களேன்” என்றார். நான்: ‘'எதைப்பற்றி?” ஆசிரியர்: "பூமிமேல் எதுபற்றி வேனுமானாலும் உங்களுக்குத் தோன்றியபடி.” நான்: 'சரிதான். இப்பத்தான் உங்கள் சிப்பந்தி, கதிருக்கு வந்த கடிதம் ஒன்றைக் காண்பித்தார். "லாசரா என்னத்தை எழுதுகிறார்; ஒன்றுமே புரியவில்லை. மண். டையைப் பிய்த்து கொள்ளலாம்போல் இருக்கிறது", அப்படியுமா என்னை எழுதச் சொல்கிறீர்கள்?’’ ஆசிரியர்: "பிய்த்துக் கொள்ளட்டுமே! இரண்டு பக்கங் கள்தானே?" ஒரு சிறுகதை எழுதவே சாதாரணமாக மூன்று மாதங் கள் எடுத்துக்கொள்ளும் எனக்குக் கதிரின் அச்சுயந்திரங் களுக்கு வாரா வாரம் என் பங்குத் திணியைத் தவறாமல் போட இயலுமா? நான் ஓயாமல் எழுதுபவன். ஆனால் வேகமாக எழுதப் பழக்கப்பட்டவன் அல்லன்; இனிமேலும் வராது, எனக்குத் தெரியும். தவிர, வாரா வாரம் என்னத்தை எழுதுவது? பிடி கொடுக்காமல் ஏதோ முனகிவிட்டு நழுவிவிட்டேன் னாலும் வெட்டென விட்டொழிக்க முடியவில்லை. :வின் விண் பொறுக்காமல், ஒருநாள் எழுந்து உட்கார்ந்து எழுத ஆரம்பித்ததன் விளைவாய்...

  • திரு கஸ்தூரி ரங்கன் நெஞ்சில் தட்ட எண்ணத்தின் முகூர்த்தவேளை கிண்டி முக்கிலிருந்து சொட்டிய நீர், ததி யாகப் பெருக்கெடுத்துவிட்டது.
  • கதிர் ஆசிரியர்