பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魔7爵 லா. ச. ராமாமிருதம் எழுத-எழுத, எழுதுவதற்கு விஷயம் விடாது வளர்ந்து கொண்டிருந்தது. எனக்கே பெரும் வியப்பு. இந்தத் தொடர் 1986இல் புத்தக அந்தஸ்து பெற்று வெளிவந்தது. சிந்தா நதியில் யார் இல்லை? நான் இருக்கிறேன். நீங்கள் இருக்கிறீர்கள். நம் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் இருக்கிறார்கள் . அவர்களுடைய குழந்தைகள் மூலம் நாளைப் பெருகப் போகும் மானுடத்தின் சந்ததிகள் இருக்கின்றன. ஜீவனின் பரம்பரையே இருக்கிறது. ஒடும் தண்ணீரில், நேற்றையத் தண்ணீர், இன்றையத் தண்ணீர், நாளையத் தண்ணிர் என்று கராமும், பாகுபாடும் பிரிக்க முடியாது; என்றுமே இன்றுதான் நதியின் ஒட்டமே தான் அதன் உயிர், உயிர்ஸ்தானம். சிந்தாநதி ஜீவநதி, ஆண்டவன் தன் உருவையே அதில்தான் உணர்ந்தான். தன் இடம் தெரியாமல் அதில் மூழ்கிக் கிடக்கிறான். தாய்மார்களே, பெரியோர்களே, என் நமஸ்காரங்கள். சகோதர சகோதரிகளே, என் ஆசிகள். இந்தா நதி தீரே சிந்தா விஹாரே... -கலைமகள்