பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. எழுத்தாளன் பாடும் கீதம்

20-2-1998, சாகித்ய அகாதெமி விருது விழாவில் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்!

எழுத்தாளர்களும், இலக்கிய விற்பன்னர்களும் கூடி விருக்கும் இந்த மகத்தான சன்னிதானத்தின் முன் நிற்க எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு அகாதெமிக்கு என் நன்றி. இவர்கள் நம் நாட்டுப் பண்பாட்டின் பல்வேறு முகங்கள், அதேசமயம் பாரதத்தின் பாரம்பர்ய ஒருமைப்பாடின் நிதரிசனமாக தரிசனம் தருகிறார்கள். இந்த விரு,ை வழங்கியதற்கு அகாதெமிக்கு என் வந்தனம். ஆனால், நான் வந்திருக்கும் தேசத்தின் பகுதி வில் ஒருமனதான அபிப்பிராயம், விருது என்னை மிகத் தாமதமாக அடைந்திருக்கிறது என்பது, குறைந்தபட்சம் இருப்து வருடத் தாமதம். ஆனால், வராமலேயே போவதற்கு இந்தமட்டுக்கும் வந்ததே. அதுமேல் அல்லவா? இப்படி சந்தர்ப்பங்களில் வழக்கமாகச் சொல்லிச் சொல்விச் "சப் பிட்டுப் போன பாஷை என்றாலும் எவ்வளவு உண்மை! ஐம்பது வருடங் களுக்கு மேற்பட்டுச் சிருஷ்டி எழுத்து ஈடுபாடின் நிறைவாய இத்தத் தருணத்தை ருசிக்க ஆண்டவன் அவனுடைய பரம கருனையில் என்னை விட்டு வைத்திருப்பதற்கு இன்புறு இறேன். குற்றம் சொல்ல எண்ணமில்லை. ஆனால் இந்த சமயம் வேறுவிதமாகவும் அமைந்திருக்கக்கூடும். அப்படி, நேர்த்திருப்பின் என் வயதில் அது ஆச்சரியமுமில்லை. உ.--12