பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் 7 இத்தேடல் சாமானியமானதல்ல. தைரியம் வேண்டி யிருக்கிறது. பொருளையே பொருள் படுத்தாமையும் வேண்டியிருக் கிறது. தேடலேதான் பொருள். என் பொருள் , என் ஒசை, என் சொல், என் நயம். என் தேடல், ஒரு பெரிய சுயகாரியந்தான். சுயகாரியப் புலித்தனம்கூட, யார் சுயகாரியப்புலி இல்லை? அடே நீ என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? முட்டாளே, இதோ பார். சக்கரம் அறுகிறது, கபாலம் ஏந்துகிறது. எல்லாம் நான்தாண்டா.’’

  • எல்லாம் என்னுடையது. நான் கொடுத்தேன். நான் எடுத்துக்கொள்கிறேன், நீகூட நான்தான். நீ உன்னைத் தேடினால், என்னைத்தான் அடைவாய்.”

இதைவிட சுகம் எது? மறுபடியும் இதெல்லாம் பரிபாஷைதான். தட்டாமாலை தாமரைப்பூ. சுற்றிச் சுற்றிச் சுண் ணாம்பு. கிட்ட வந்தால் கிள்ளுவேன், எட்டப்போனால் துப்புவேன்.” பரி பாஷை, பரிபாஷை, பரி பாஷை, சர்வாகாரம் சதாகாரம் ஸ்வயாகாரத்தின் ஸ்ர்வாதிகாரம். நித்யத்வம் என்மேல் படும்போது, அதைச் சொல்லில் பிடித்து, அந்த நிமிஷத்தை நித்யமாக்கிவிடலே என் தேடல்: என கனவு. நான் நித்யத்துவத்திற்கு ஆசைப்படுகிறேன்.