பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தாளன் பாடும் கீதம் 173 ஏதோ தரிசன சாத்ய சாயை காட்டி, சமயங்களில் மந்த்ரோச்சாடனம் போன்ற சப்த நயன் களில் ஸாஹலம் புரிந்துகொண்டு, வாசகனுள் உறங்கிக் கிடக்கும் சுயப்ரக்ஞையைத் தட்டி எழுப்பி (உயிரின் ஒருமையை, தேடலில் ஆத்மாவின் தனிமையை உணரச் செய்து) கட்டடங்களில் சொல் வேகம் கவிதை நயத்தை, உபநிஷத் கதைத் தன்மையை அடைந்து -இதுதான் சிந்தாநதி. சிந்தாநதியெனும் சிருஷ்டி சொல்லும் பாணியிலும், பாஷையிலும் செய்த சாதகம் மாத்திரம் இல்லை. அதையும் மீறியது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் மெனக்கெட்டு என்னைத் தேடி வந்திருக்கிறார்கள். புத்தகத்தில் ஏதோ ஒரு பக்கத்தில், இங்கே ஒரு வரி, அங்கே ஒரு சொல் அவர் கள் பட்டுக்கொண்டிருக்கும் சோதனைக்கு, துயரத்துக்கு ஆறுதலாய் புண்ணுக்கு ஒளஷதமாய் அமைந்திருந்ததைச் சொல்லிக்கொள்ள, கண்களிலிருந்து செதிள்கள் உதிர்ந்த இதுகாறும் அவர்கள் வாழ்க்கையைப் பற்றிக்கொண்டிருந்த நோக்குக்குப் புதுப் பரிணாமம் தந்ததை என்னோடு பங்கிட்டுக்கொள்ள அதில் அவர்களுக்கு ஒர் ஆறுதல். இப்படி என்னிடம் அவர்கள் மனம் திறக்கையில் அதற்குச் சாr) நிற்பது பயம் தருகிறது. ஆனால் அவர்கள் சுமை இளக என் சொல் உதவிற்று என்பதை நினைக்கையில், நான் எழுதியது வீனில்லை என்ற நிறைவு பெறுகிறேன். சதிகொண்டு மனிதனுக்கு மனிதன் பகை மூட்டும் அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை . என்னுடைய பொருட்டு, மனிதனின் நம்பிக்கை, கடவுளிடம் நம்பிக்கை, காலக்ரமத்தில் தன்மேல் நம்பிக்கை யில் தெளிவடைகிறது. ongoff; 2,36.15%, 2.5Gasto (THE SP!RET OF MAN) இத்துடன்தான் எனக்குச் சம்பந்தம் அடங்காது, அஞ்சாது, முன்னேறிக்கொண்டு மேலும் மேலும்-மனிதச்சுவடு படாத ஸ்தலத்தில் இன்னமும் கணிக்காத சிந்தனைக் கடல்களில்...