பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 8ó லா. ச. ராமாமிருதம் வாழ்க்கையின் ரஹஸ்யத்தைப் புரிந்துகொள்ள அதன் வ்யவஸ்தையைச் சோதித்து, கிளறி அதற்கு நாம் கற்பிக்கும் அர்த்தம் தவிர வேறு இல்லை என்று அறிந்த பின்னரும் தன் கம்பீரத்தில், துணிச்சலில் கற்பிக்கும் சக்தியில், உயிரின் உசாத்திரைக்கு நோக்கம் உண்டாக்கி, தலைவிதியை மனிதனின் மஹாலங்கல்பமாக மாற்றி அமைக்கும் ஆவேசம் (THE SPIRIT 0F WAN) இதுதான் என்னுடைய பொருட்டு. என்பாடு மனித குடும்பத்துடன்-அவன், அவனுடைய ஸ்திரீ, மகவு என வாழ்க்கையின் தர்மமே ஆகிய குடும்ப மெனும் மும்மூர்த்தம், குடும்பப் பாசம், அதன் படிப்படியான விரிவில் மனித வர்ச்கத்தின் மேலேயே அன்பாக முதிர்ந்து, பிறகு அதுவும் முறையாக, எல்லையற்ற விதவிதங்களில் செளந்தர்யம் கொண்ட ஜீவராசிமேல் பரிவாக மாறும் மானிடத்துடன் தான் என் பாடு. &@55gā Qoirógão (THE SONG OF THE SPłRT OF MAN) காணி.த்தின் கீதத்தில்தான் எனக்கு இழைவு. உங்களுக்கு நான் சொல் தின் கீதத்தின் பித்துப் பிடித்தவன். ராமகிருஷ்ண ஹம்ஸ்ரைக் கடவுளின் பித்துப் பிடித்தவர் என்று ரொெ ரோலந்த் விவரிக்கிறார். துபோல் கீதம் அவனுக்குச் சொந்தமாயிருந்த நிலை மாறி அவனே அதற்குச் சொந்த Pாகிவிடும்போது எழுத்தாளனால் பாடாமல் முடியாது. காலத்தினால், மனிதனால், எதனாலும், யாராலும் , என்ன இடையூறானாலும் அதை மீறி எழுத்தாளனையும் மீறி, கீதம் ஒலித்துக்கொண்டிருக்கும். அதுவே அவன் சோதனை (சிலுவை: CROSS) அவனுடைய சோதனையில்தான் அவனுடைய மஹத்தான பெருமையே. 宽