பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 லா. ச. ராமாமிருதம் இடையிடை பாலங்களினடியில் நாட் ஒடும் வாய்க் கால்களில் தனித்தனித் துறைகளில் ஆடவரும் பெண்டிரும் நீராடுகின்றனர். புடவையை வேட்டி போல் மார்பில் இழுத்துச் சொருகி... பரவாயில்லை, தைரியமாக நடுத் தண்ணீரில் நீந்துகின்றனர். துளையலின் வெறியில் உறிஞ்சி உமிழும் தண்ணிர் மத்தாப்பு வீச்சில் மீண்டும் ஜலத்திலேயே விழுகிறது. அங்கங்களின் விண்விண் செழிப்பு ஆடைகளின் வர்ணங் கள், வாய்க்காலைச் சூழ்ந்த பசுமையோடு இழையும் ஜாலங்களுடன் வானத்தின் மந்தாரத்தைக் குழை. சோலைகளின் நடுவே அதோ அகன்றதோர் கோபுரம் -பூரீரங்கம். பின்னால் திரும்பிப் பார், மலைக்கோட்டை காவேரிப் பாட்டி, பாரியாகப் படுத்திருக்கிறாள். புது வெள்ளம், அவள் நரைக் கூந்தலாக, அலை அலையாய் சடைசடையாய், நுரைதுரையாய்ச் சோம்பி மதமதிக்கிறது. அம்மாடி! யிரம்மாண்ட ஒவியம் இதைத் தீட்டிய துTரிகை வீச்சில் நான் அலட்சியமான சின்னஞ் சிறியதோர் சுழிப்பு. ஆனால் இதில் இடம் கண்டுவிட்டபின், நான் இல்லாமல் இந்த ஒவியம் பூரணமில்லை. பூரணத்துக்கும் பூரணம் தந்தபடி, பூரணத்தோடு இழைந்து, என் இடத்தில் இடம் தெரியாமல் இயங்கும் இந்தப் பேறு கிடைக்க என்ன புண்ணியம் செய்தேனோ! வான் நீலம், நதியின் தூரத்து விளிம்பில், காவேரிப் பாட்டியின் கூந்தல் விரி எழுப்பிய பிசுபிசுப்படலமெனப் படபடக்கிறது. எந்தக் கவிதையும் யாருடைய சொந்தக் கவிதை அல்ல. எல்லாம் அவள் அணிந்த மாலையினின்று உதிரும். இதழ்கள்.