பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையின் தரிசனம் 25 கலியாணமோ கார்த்தியோ!... கார்த்தி விளக்கேற்றும் ஒவ்வொரு பெண்ணும் தன் சோதரனின் நல்வாழ்வுக்கு ஏற்றுவதாக ஒரு பாவனை. எனக்கு?- என்னை நினைக்க... ஐவர் பிறந்தோம்; இன்று இருவர் எஞ்சி நிற்கிறோம். என் தம்பியும் நானும், என்னை எனக்காகவே நினைக்க ஒருத்தியும் இல்லையா? லேசாக மூச்சுத் திணறுகிறேன். உடனேயே மனம் தேற்றிக்கொள்கிறது. எழுத்து எனும் பெரும் உறவு இருக்கிறதே! நேரில் சந்திக்க முடியாவிட்டாலும், வாசகர் வழியில் எனக்குக் கிடைத் திருக்கும் தங்கைமார்களே, உங்களுக்கு என் பரிபூரண ஆசிகள் . என் தாய்மார்கள் அனந்தம்பேருக்கும் என் சான்டாங்க நமஸ்காரம். 岑 次 燃 சின்றைக்குமே கோழித் தூக்கம்தான். ஆனால் இன்று படு மோசம், புரண்டு புரண்டு இருப்பே கொள்ளவில்லை. என் கையே எனக்குத் தெரியாத இந்தக் கும்மிருட்டில் விட்டம் எங்கே தெரியப்போகிறது? ஆனால் அம்பத்துாரில் அவள் சுட்டிக்காட்டுவதுபோல், பகலிலேயே விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததன் அடிப்படையில்தான் இந்த ப்ரயானம் விளைந்தது. ஆயிரம் குருட்டு யோசனைகள், புழுக்கங்களின் கடையலிலிருந்து ஒரு வாக்கியம் விட்டத்தின்:ே0ல் சுருள் பிரிந்தது. "வாழ்க்கையின் பிரயாணமே உயிரின் தரிசனம்.” வார்த்தைகள் தனித்தனி மயிலாடின.