பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2鲁 லா. ச. ராமாமிருதம் எனக்கே, எப்பவுமே கொஞ்சம் திரியல் பித்து உண்டு. இப்படி இரண்டு வருடங்கள், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை. இப்படித்தானே. ஆத்ம விமோசனத்தைத் தேடிப் பிக்குகள் கிளம்பியிருப்பார்கள்! இப்படியா என்மாதிரி, பெட்டி, படுக்கை டில்லிக் கூடையுடன்-? அவர்களுடன் உன் பேரை இணைத்துக்கொள்வதால், துறவு என்று உனக்குள் நினைப்பா? அந்த எண்ணத்துடன் ஸ்ரஸ்ம் நடத்துகிறாயா? இது என்ன , ;iaாயை காe? "வாழ்க்கையின் பிரயாணமே உயிரின் தரிசனம்.' - சந்தானம்' யார், இந்த வேளையில்? படுதாவைத் தூக்கிப் பார்க்கிறேன். வாசற்படியில் ஒரு உருவம் 'சந்தானம் இருக்கானார்’ சந்தானமே வந்துவிட்டான் இருவரும் சற்று எட்டப் போய்க் 'கிசுகிசு’’ பேசி, சந்தானம் அவரோடு போப் விட்டான். உயிரின் தரிசனம் என்றால் என்ன? மனித முகம்தான். மனித முகம் மட்டும் அல்ல. சிருஷ்டியின் பல்வேறு முகங்கள். எண்ணற்ற முகங்களைப் பார்த்துப் பார்த்து நாளடைவில் உன் பார்வையின் பக்குவத்துக்கேற்ப ஒருநாள் எல்லா முகங்களும் முகத்துடன் முகம் இழைந்து ஒரு முகம், ஒரே முகமாக எப்போது தெரிகிறதோ அதுதான் அவள் தரிசனம். 豪 岑 翠 மாறி மாறி தூக்கத்துக்கும், விழிப்புக்கும் சஞ்சலத் துக்குமிடையே கனவில் மாதிரியிருக்கிறது. சந்தானம் வந்த மாதிரி, அவனை மணி கேட்ட மாதிரி, '3.35 மாமா"