பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

hyph சிரமமான நிலை....ஆனால் அதில்தான் உற்சாகம் இருக்கிறது. என் கற்பனை திடீர் திடீர் வெள்ளம் புரள்வதில்லை.

ஆனால் ஊற்று வற்றியதில்லை.

கவலை வந்ததும், முதலில் இருப்பதை ஒன்று சேர்த்து ஒழுங்குபடுத்தியாக வேண்டும் அவசியம் தோன்றிவிட்டது. அந்த மனநிலையில் இதோ என் முதல் கட்டுரைத் தொகுதியை உங்கள் முன் வைக்கிறேன்.

எழுத்தாளனின் சொத்து அவனுடைய எழுத்துத்தான், அதாவது எழுத்து வழி அவனின்று வெளிப்பட்ட அவன் எண்ணங்கள், ஆசைகள், ஆசா பக்கங்கள், லக்ஷியங்கள், லக்ஷியங்களின் சிதைவுகள், அன்புகள், துரோகங்கள் -- இழைத்தவை, இழைக்கப்பட்டவை சேர்த்து-- அபிமானங்கள், வைராக்க்கியங்கள்--ஹ்ம்...

கதை, கவிதை, கற்பனை என்கிற பூக்களுக்கடியில் நெளிவது, இழைவது, இயங்குவன அவைகளின் அப்பட்டத்தில் எண்ணங்கள்,

எண்ணங்கள் எண்ணியவை எண்ணியபின் எண்ணியவைக்குப் பின்வாங்கல் இல்லை. அப்படிய மாற்றுக்கள் பின்வாங்கல்களை எண்ணினாலும் அவை வேறு எண்ணங்கள் , விருத்திகா.

எண்ணங்கள் அழிவற்றவை,

அழிவற்ற இந்த சொத்து பங்காகி, பங்கானவரிடம் மேலும் மேலும் விருத்தியாகி, என் எண்ணங்களின் வியாபகத்தின் மூலம், அமரத்வத்துக்கு ஆசைப்படுகிறேன். உயிரின் லக்ஷியம், இயல்பே அமரத்வந்தான்.