பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லோடு என் உறவு 75 சாப்பாட்டுக்கு உட்கார வைத்து, பேச்சோடு பேச்சாக ஸ்ர்வ லாதாரணமாகச் சொல்கிறான், "மாமா, வந்தவாளை உபசாரம் பண்ணி திருப்திப்படுத்தி, இந்த சமயத்திைப் பரிமளிக்கச் செய்வதைவிட எங்களுக்கு என்ன வேலை? சமயத்தைப் பரிமளிக்க சொல் இவ்வளவு ஒனசயின்பத் துடனும், மனத்துடனும், சொல்லிக் கொடுத்த வார்த்திை எப்படி வெளிப்படுகிறது. முற்றின வயதுக்காரன் னைக்கு இப்படிப் பேச வருமா? குழந்தை அம்மாவைக் கேட்கிறது இந்த மூக்கை (முறுக்கை) நேக்கு தேந்து (திறந்து) திறந்து அது கேட்பது பிட்டுத்தா இவைகள் என் எழுத்துப் பிரயாசையில் நான் உற்பத்தி பண்ணின வார்த்தைகளல்ல. தற்செயலில் செவியில் பட்டு, நினைவில் தைத்து, தைத்த இடத்தில் தங்கி வளர்ந்து கொண்டு விண் வின் என என் உயிரைத் தெறித்துக் கொண்டிருக்கும் ஜீவ முத்துக்கள்.

வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தவனுக்கு எழுத் திைப் பயில்பவனுக்கு, கேட்கச் செவியையும், அாணக் கண் களையும் பழக்கிக்கொள்ளுதல்- வெறுமெனப் பழக்கிக் கொள்ளுதல் அல்ல-discipline செய்துகொள்ளல் முதல் அவசியம் அப்பொழுதுதான் இதுபோல் மொழி முத்துக்கள் கிடைக்கும். கிடைத்துக்கொண்டேயிருக்கும் முதல் இன்பம் கண்டவனுக்கு, அடுத்து, எழுத்து என்னும் Communication பான் பெற்ற இன்பம் வையகத்துக்கு, வையகத்திலும், அடையாளம் கண்டுபிடித்துக் கொள்பவர்களுக்குத்தான் என்று சொல்லத் தேவையில்லை. சொற்களும் ஆத்ம பந்துக்களும் ஒன்றில் ஒன்று நிறைவு காண்கின்றன. வாய்ச் சொல்லாகக் கேட்டுப் பிறகுதான் வார்த்தை களை எழுத்தில் வடித்தாகிறது. வாய்ச்சொல்லுக்கும் முன்னைய உள்ளத்தின் எழுச்சி உக்கிரத்தை, மழுப்பாமல்