பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லோடு என் உறவு 85 should be ruthiess) சத்தியத்தின் எடை இரக்கமற்றது. சொல்லின் வழி சத்தியத்தை நோக்கிச் செல்கிறேன் என்கிற நினைப்பு இருத்தல் வேண்டும். சத்யம் சிவம் கந்தரம் மூன்று கோட்பாடுகளும் ஒன்றுக் கொன்று இணைந்தவை. சத்யம்-காலவரையின்றி இந்தப் புவனம் அதன் தோற்றத்தினின்று இன்று வரை, இனிமேலும் அந்தரத்தில் அதன் இடமும் இயக்கத்தின் சீர்பாடும் பிசகாத தத்துவம் அரூபமான கொள்கை. சத்யத்தின் defination அடங்கவில்லை. இது என் மேதாவிலாசத்தைக் காட்டிக் கொள்ளவுமல்ல. இந்த சமயத்துக்கும் உளப்பாடுக்கும் ஒவ்வியதாக, என்னுடைய அர்ச்சனைச் சொல் என்று கொள்ளும்படி மிகப் பணிவுடன் வேண்டிக்கோள்கிறேன். சிவம்= அன்பு சுந்திரம்=அழகு எழுத்தின் Creative process-ல் இந்த வார்த்தைகளை சிவம் , சுந்தரம், சத்யம் என்கிற வரிசையில் அடுக்குவேன். சிவம்:-எழுத்தின் Contextஇல் சமயத்தின், உள்ள நெகிழ்ச்சி-அதன் வேகம் பின்பு அறிவின் வேகமானியில் வேறுபடலாம்-உள்ள நெகிழ்ச்சி சிறிதேனும் இலாது ஒரு படைப்புக் கருவூலம் காணமுடியாது என்பது என் துணிபு. இந்த உள்ள நெகிழ்ச்சியை சிவம் என்று கொள்ளலாமா? சுந்தரம்:-அந்தப் படைப்பின் வெளியீடு, வெளியீட்டு முறை, சொற்கள் உத்திகள் இவைகளுக்கெல்லாம் அடிப் படையான ஊக்கம், சிரத்தை இவையெல்லாம் அடங்கும். சத்யம்:-இந்தப் படைப்பு ஒருவாறு தன் முடிவு கண்ட பின், எழுத்தாளனோ, வாசகனோ அவனவன் வாழ்க்கைப் பிரயாணத்தில் குறிப்பிட்ட எழுத்தின்மூலம், தான்